
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த வெள்ளையூர் கிராமத்தில்சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் கழை கூத்தாடி சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ் அவர்களின் தலைமையில் இலவச மனை பட்டா மற்றும் சாதி சான்றிதழ் சாலை அமைத்தல் குடிநீர் வசதி ஏற்படுத்தி தருதல் போன்ற அடிப்படை கோரிக்கைகளை முன்னிறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது அவர்களுடன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருஞ்சிறுத்தை கலியமூர்த்தி பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஆனந்தன் கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மூர்த்தி பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் வினோதன் மூத்த உறுப்பினர் ஐயா தனவேல் உளுந்தூர்பேட்டை சட்ட மன்ற தொகுதி தலைவர் பொன்னுரங்கம் தொகுதி மாணவரணி சதிஷ்

100க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர் இதனை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் இந்த மக்களின் அடிப்படை தேவைகளை சரி செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.