
சென்னை: பல்லாவரம் வேல்ஸ் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமையில் 28/04/22 பல்லாவரம் டாக்டர்.அம்பேத்கர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சி சார்ந்தவர்களும் வெவ்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். பல்லாவரத்தில் இயங்கி வரும் வேல்ஸ் கல்லூரி நிர்வாகம் ஆடை கட்டுப்பாடு , ஒழுக்க கட்டுப்பாடு என்று ஒரு சில சமூகத்தை சேர்ந்த மாணவிகளை மட்டும் தொடர்ந்து அச்சுறுத்துவது மற்றும் கண்டிப்பது என்பது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது இந்த சூழ்நிலையில் தாம்பரம் கடப்பேரி பகுதியில் குடியிருக்கும் ரவிகுமார் என்ற சின்னாவின் மகள் ராகவி B.A இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். தன் பெற்றோர்களிடம் கல்லூரி நிர்வாகம் அவமானப்படுத்திய விஷயத்தை கூறினார் இதனை அடுத்து பெற்றோர்கள் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று விளக்கம் கேட்டுள்ளனர். மாணவியின் எதிரிலேயே பெற்றோர்களிடம் மாணவியை குறித்து அவதூறாக பேசியதால் 24.03.2022 அன்று மன உளைச்சல் ஏற்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். வேல்ஸ் கல்லூரி நிர்வாகத்தின் அவமரியாதை செயலால் மாணவிக்கு மன உளைச்சல் ஏற்பட்டு இந்த தற்கொலை நடந்துள்ளது. இதனடிப்படையில் தாம்பரம் காவல்துறை FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்த சில நாட்களில் இதே கல்லூரியை சேர்ந்த தஞ்சாவூர் மாணவி பவித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த கல்லூரியை குறித்து வெளியில் வராத உண்மைகள் பல உள்ளன என்று பகுஜன் சமாஜ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இந்த வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யும் விசாரணை நடத்தி கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்.

மேலும் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் அரசிற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.