பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை – காது கேளாத, வாய்பேச முடியாத பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

ராஜஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த மாற்றுத்திறனாளிப் பெண், குஜராத் மாநிலம் மெஹ்சானாவில், தன் 5 வயது மகன், கணவனுடன் வசித்து வந்தார். காது கேளாத, வாய் பேச முடியாத அந்த பெண்ணை அந்த பகுதியில் வசித்து வந்த 4 பேரால் பலமுறை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அதைப் பல முறை கணவனிடம் கூற முயன்றும் முடியாமல் தவித்து வந்துள்ளார்.ஒருகட்டத்தில் தாயின் நிலையை அறிந்துகொண்ட 5 வயது சிறுவன் தன் தாயிக்கு நடக்கும் கொடுமையை தன் தந்தையிடம் கூறியுள்ளார். இதை அறிந்த அந்த 4 பேரும், “உடனே ஊரை காலி செய்து மீண்டும் ராஜஸ்தான் சென்று விட வேண்டும். இல்லையென்றால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம்” என அந்த குடும்பத்தை மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையில், உயிருக்குப் பயந்து அங்கிருந்து அந்த குடும்பம் மீண்டும் ராஜஸ்தான் வந்துவிட்டனர். அதன் பின்பு நடந்த சம்பவத்தை ஜீரோ எஃப் ஐ ஆர் விதியின்கீழ் அவரின் கணவர் ராஜஸ்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரித்த காவல்துறை, “செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் குறைபாடு உள்ள பெண் நான்கு பேரால் பலமுறை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த நான்கு பேரையும் கைது செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *