
பரமத்தி வேலூர் அருகே இரு பிரிவினரிடையே மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே இரு பிரிவினரிடையே இன்று திடீரென மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தாக்குதல் நடத்தி ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களை கைது செய்யக்கோரி மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் வேலூர் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.