
புதுடெல்லி: சமீபத்தில் நடந்த ரகசிய சந்திப்பு விவரம் வெளியானால் தமிழக அரசியலில் பெரும் புயல் வெடிக்கும் என கூறப்படுகிறது. தொழில் அதிபர் அதானியின் நிறுவனங்கள் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தற்போது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மறுபுறம், இதே பிரச்னையால் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் தினமும் முடக்கி வருகின்றன.இந்நிலையில், வெளிநாட்டு தலைநகர் ஒன்றில், தி.மு.க., முக்கிய பிரமுகர் ஒருவர், அதானியை சந்தித்து பேசியுள்ளார். இவருடன் தமிழக அரசின் அதிகாரி ஒருவரும் உடனிருந்தார். அதானி விவகாரத்தில் காங்கிரஸுடன் இணைந்து திமுக செயல்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பின் புகைப்படம் வெளியானால் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகும். இந்த புகைப்படம் அதானியிடம் உள்ளது. இதுதவிர, தி.மு.க.,வினர் பேசியது குறித்த ‘ஆடியோ’வும் அதானியிடம் உள்ளது. ஆனால், இதை அதானி வெளியிட விரும்பவில்லை.சென்னை அருகே பரந்தூர் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதன் கட்டுமானம் மற்றும் மேலாண்மை தனியாரிடம் ஒப்படைக்கப்படும். ஏற்கனவே பல விமான நிலையங்களை நிர்வகித்து வரும் அதானி நிறுவனமே பரந்தூர் விமான நிலையத்தை அமைக்கும் திட்டத்தையும் பெறும் என்று கூறப்படுகிறது.