பரந்தூரில் ரூ.20,000 கோடிமுதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையம்; தமிழக அரசு.!

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 24 ஆண்டுகளாக 2-வது விமான நிலையம் குறித்து பேசப்பட்டாலும் தற்போதுதான் அதற்கான அமைவிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ளது. தொழில் நுட்ப ரீதியில் விமான நிலையில் அமைய சாத்தியமான இடங்களில் ஒன்றாக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4700 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.எதிர்கால மக்கள் தொகை பெருக்கம், தொழில்துறை வளர்ச்சியை கருத்தில் கொண்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. விமான நிலையம் அமைக்க முதலீடு செய்யும் ரூ.100-க்கு, வருமானமாக ரூ.325 தமிழகத்திற்கு வருமானமாகக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *