
பெண்கள், குழந்தைகள் நலனுக்காக ஒதுக்கப்படும் நிர்பயா நிதி பயன்படுத்தப்படாததுகுறித்து நாடாளுமன்ற நிலைக்குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.கடந்த 2012ஆம் தலைநகர் தில்லியில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மத்திய அரசால் நிர்பயா நிதியம் உருவாக்கப்பட்டது.இதையும் படிக்க |காதலர் தினத்தில் காதல் திருமணம்: வரலாறு படைக்குமா மாற்றுப்பாலின ஜோடி?மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் விதமாக நிர்பயா நிதி ஒதுக்கப்படுகிறது.

இந்நிலையில் பெண்கள், குழந்தைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவானது நிர்பயா நிதி முழுவதுமாக பயன்படுத்தப்படாதது குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் 316ஆவது அறிக்கையின் மூலம், நிர்பயா நிதிக்காக மொத்தம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.9549 கோடியில் இதுவரை ரூ.4241 கோடி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில்ரூ.2989 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.இதையும் படிக்க |உன்னாவ் தலித் பெண் பலியானது எப்படி? உடற்கூராய்வில் அதிர்ச்சிஇதுகுறித்து கவலை தெரிவித்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழு நிர்பயா நிதி பயன்படுத்தப்படாததற்கான காரணங்களை ஆராய அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என நிலைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
செய்தியாளர் சிவபெருமான்