
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி நிறைவு விழாவில் அவர் பேசியதாவது, 80 தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்களை தமிழகம் உருவாக்கி உள்ளது. உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரில் பங்கேற்ற இந்திய அணியின் 4 வீரர்களில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.வெற்றி இலக்காக கொண்டு விளையாடுங்கள், உங்கள் வெற்றி பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்க்கும்.
ஆசிய ஹாக்கி சாம்பியன் தொடர், உலக சார்பிங் லீக் போட்டிகளும் தமிழகத்தில் நடைபெறவுள்ளன. விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி பெற தடையாக ஏதுவும் இருக்க கூடாது என்பதற்காக நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.
பன்னாட்டு விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு உகந்த இடமா தமிழ்நாடு உள்ளது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.