சென்னை மாநகராட்சியில் பட்டியல் இனத்தவர்களுக்கு கூடுதலாக 4 வார்டுகளை ஒதுக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. chennai corporationநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது.

சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ள நிலையில் 16 வார்டுகள் பட்டியலின பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பெண்கள் பொதுப்பிரிவினருக்கு 84 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 200 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.voteஇந்த சூழலில் பட்டியலினத்தவருக்கு கூடுதல் வார்டுகள் வேண்டுமென்று அம்பேத்கர் இந்திய ஜனநாயக இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

அதில் சென்னை மாநகராட்சியில் பட்டியலினத்தவருக்கு கூடுதலாக 4 வார்டுகளை ஒதுக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் பட்டியலினத்தவருக்கு கூடுதலாக இட ஒதுக்கீடுகளை ஒதுக்க உத்தரவிட முடியாது என்றும் வார்டு மறுவரையில் கதலையிட முடியாது என்றும் கருத்து தெரிவித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது