
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரத்தில் பட்டாகத்திகளை காட்டி தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்டு வந்த நான்கு நபர்கள் நேற்று முன்தினம் கெடிலம் அருகில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் ஆட்டோ ஒன்றிற்கு டீசல் நிரப்புமாறு கூறிய உள்ளனர் டீசலை நிரப்பிய பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் டீசல் நிரப்பிய தொகை ரசீதை அவரகளிடம் கொடுத்துள்ளார். அப்பொழுது ஆட்டோவில் இறங்கிய இளைஞர்கள் பட்டா கத்தியுடன் அங்கிருந்து ஊழியர்களை தாக்கி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் பயந்து ஓடிவிட்டனர். இந்த சம்பவம் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஷ் அவர்கள் மேற்பார்வையில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து திருநாவலூர் காவல் ஆய்வாளர் அசோகன் தலைமையில், எஸ்ஐ பிரபாகரன் மற்றும் எஸ்எஸ்ஐ ரமேஷ் குமார் மற்றும் காவலர்கள் ராஜன்,பாபு,தீபன்,சக்கரவர்த்தி இளையராஜா ஆகியோர்கள் சம்பந்தப்பட்ட நபர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். திருநாவலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.