
சென்னை: பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தொடங்கிய நிலையில் சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். பேச வாய்ப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருக்கிறார். சட்டப்பேரவையில் எழுந்து நின்று அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டமன்ற மரபை அதிமுக உறுப்பினர்கள் பாதுகாக்க வேண்டும் என சபாநாயகர் தெரிவித்திருக்கிறார்.