

உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று 08.02.2022 பஞ்சாப் மாநில சட்டமன்றத்தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது,இத் தேர்தல் பிரச்சார பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும் முன்னால் முதல்வருமான பெகன்ஜி மாயாவதி அவர்களும்,சீரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் ஸ்ரீ சுக்வீர்சிங்பாதல் அவர்களும் கலந்துக்கொண்டு.

BSP—SADL கூட்டணி வெற்றிபெற்றால் பஞ்சாப் மாநிலத்தில் சாதி மதவெறி இல்லாமல் சட்டத்தின் ஆட்சி நடைபெறும், அனைவருக்கும் சமமான முறையில் அனைத்து துறைகளிலும், வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு முறையில் நிறைவேற்றி தருவோம், பெண்களுக்கு முழு பாதுகாப்பும் வழங்குவோம் என்றும் பகுஜன் சமாஜ் கட்சி சிரோன்மணி அகாலிதளம் ஆட்சி அமைத்தவுடன் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் தாதாசாகிப் காஞ்சிரம அவர்களின் பெயரில் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என்றும் சிறப்புரையாற்றினார்கள், இந்த பொது கூட்டத்தில் இலட்சகணக்கான மக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.!