பஞ்சாப் சட்டசபை தேர்தல்.. 117 தொகுதிகளில் ஒன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு.. பலத்த பாதுகாப்பு.!

பஞ்சாப்: பஞ்சாப்பில் இன்று ஒரே கட்டமாக 117 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பஞ்சாப்பில் காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கி மாலை 6 மணி வரை தேர்தல் நடக்க உள்ளது.பஞ்சாப்பில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோன்மணி அகாலிதளம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில் 1 லட்சத்திற்கும் அதிகமான போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.3 விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம், 3 விவசாய சட்டங்கள் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை பஞ்சாப் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.2017 சட்டசபை தேர்தலில் பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி வென்றது. அங்கு பாஜக – சிரோன்மணி அகாலிதளம் கூட்டணி ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்து காங்கிரஸ் சார்பாக அம்ரிந்தர் சிங் முதல்வராக தேர்வானார். அந்த தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களை வென்று அபார வெற்றிபெற்றது.அதேபோல் ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களை வென்றது. பாஜக – சிரோன்மணி அகாலிதளம் 18 இடங்களை வென்றது. லோக் இன்சாப் கட்சி 2 இடங்களை வென்றது.இந்த நிலையில் கடந்த வருடம் காங்கிரஸ் கட்சி முதல்வர் அமரீந்தர் சிங்கை கட்சியில் இருந்து நீக்கியது. உட்கட்சி மோதல் காரணமாக அமரீந்தர் சிங் நீக்கப்பட்டார். அவர் தற்போது பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கி பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க உள்ளார். இன்னொரு பக்கம் சிரோன்மணி அகாலிதளம் பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது,காங்கிரஸ் கட்சி முதல்வர் சரஞ்சித் சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்திக்கிறது. ஆம் ஆத்மி கட்சி பாக்வத் மன் முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது.பஞ்சாப்பில் இன்று 2.14 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 1304 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 93 பெண்கள் பஞ்சாப் தேர்தலில் கட்சிகள் மூலம் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ள நிலையில் பஞ்சாப்பில் போலீஸ் பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளது.பஞ்சாப்பில் 2,14,99,804 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,02,00,996 வாக்காளர்கள் பெண் வாக்காளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *