
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நன்னாரம் கிராமத்தில் சர்வே எண் 163/2ல் 2.5 ஏக்கர் பஞ்சமி தரிசு நிலத்தை அதே கிராமத்தில் வசிக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த கௌசல்யா க/பெ ஜோதி என்பவர் பல ஆண்டுகளாக தனது பெயரில் பட்டா மாற்றம் செய்து வருபவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420,441 மற்றும் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியலின பழங்குடிகள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு 3(1)f 3(1)g ஆகிய பிரிவுகளின் கீழ் கண்டிக்கக் கூடிய குற்றமாகும் எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அவர்களிடம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ் அவர்களின் தலைமையில் மாவட்ட பொருளாளர் சிவபெருமான் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மூர்த்தி உளுந்தூர்பேட்டை தொகுதி தலைவர் பொன்ரங்கம் ஆகியோர்கள் மனு அளித்தனர்.

மேலும் இந்த பஞ்சமி நிலம் மீட்பு தொடர்பாக ஒரு ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் நிலையில் இதனை உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் என கோரிக்கை வைத்து மனு அளித்தனர் இதை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் அவர்கள் மனுவை விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கும்படி உறுதி அளித்தார்.