
உளுந்தூர்பேட்டை: பகுஜன் சமாஜ் கட்சி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி ஆலோசனை கூட்டம் இன்று 22 ஜனவரி 2023 உளுந்தூர்பேட்டை நகராட்சி பகுதியில் நடைபெற்றது தொகுதி தலைவர் ஜெ.பொன்னுரங்கம் தொகுதி பொதுச் செயலாளர் பெ.ஆரோக்கிய செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். தொகுதி துணைத் தலைவர் அஜித்குமார் தொகுதி பொருளாளர் ம.அறிவுச்செல்வம் தொகுதி மாணவர் அணி செயலாளர் மு.சதீஷ் திருநாவலூர் ஒன்றிய தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ந.ஜீவன்ராஜ் மற்றும் மாவட்ட செயலாளர் ஆனைவரி தி.மூர்த்தியார் அவர்களும் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்தும் கிளைகளை உருவாக்குவது பற்றியும் மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் மாநில தலைவர் திரு.கே.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கி தீர்மானம் இயற்றப்பட்டது மேலும் வானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கு செக்டார் தலைவர் பொறுப்பும் நாச்சியார் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கு செக்டார் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டது.