
ஈரோடு: பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினரும் பகுஜன் பயிற்சியாளரும் திரு.சாக்கியகபிலன் என்ற சேகர் ஐயா அவர்களின் திருஉருவப்பட திறப்பு விழாவிற்கு படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு ஈரோடு மாவட்ட தலைவர் பொறியாளர் திரு.ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில தலைவர் K.ஆம்ஸ்ட்ராங் B.A.B.L அவர்கள் கலந்து கொண்டனர் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.கோபிநாத் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் திரு.க.ராஜவேல், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.தேவேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் திரு.சென்னியப்பன், மாநில குழு ஒருங்கிணைப்பாளர் புலவர் திரு.பார்மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாவட்ட தலைவர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் நிகழ்வில் உரையாற்றிய மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பேசுகையில் இந்தியாவிலேயே மற்ற கட்சிகளை விட பகுஜன் சமாஜ் கட்சியில் பணியாற்றுவது மிக சிரமமான காரியம் ஏனென்றால் பாபா சாஹிப் அம்பேத்கர் அவர்கள் கூறிய சமத்துவம் சகோதரத்துவம் போன்ற தத்துவங்கள் பகுஜன் சமாஜ் கட்சியில் தான் உள்ளது என்றும் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள் கூறியது போல சமூக பணி செய்யும் பொழுது தன் நேரத்தையும் பணத்தையும் வாழ்க்கையும் அர்ப்பணிப்பதை சமூக பணி என்று கூறுவர் பாபா சாகேப் அம்பேத்கர் அதுபோன்றுதான் பகுஜன் சமாஜ் கட்சியில் உள்ளார்கள் தங்களின் பணத்தையும் வாழ்க்கையும் செலவழித்து கட்சியை வளர்க்கிறார்கள் என்றும் கூறினார்.