
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அடுத்த நன்னாவரம் கிராமத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் திரு.ஜீவன்ராஜ்-சுகுணா அவர்களின் குழந்தைகளுக்கு பௌத்த முறை படி மகா மங்கள காதணி விழா நடைபெற்றது இதனை தொடர்ந்து மாநிலத் தலைவர் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஜனவரி 15 பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் சகோதரி மாயாவதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 13 கிராமங்களில் கொடியேற்று விழா நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ், மாவட்ட செயலாளர் ஆனைவரி மூர்த்தியார், மற்றும் மாவட்ட பொருளாளர் சிவபெருமான் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத்தலைவர் திரு.ராஜவேல் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.மைக்கேல்தாஸ் மாநில செயலாளர் திரு.ஸ்டீபன்ராஜ் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.கருஞ்சிறுத்தை கலியமூர்த்தி ஆகியேர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி ஏற்பாடு உளுந்தூர்பேட்டை தொகுதி தலைவர் பொன்னுரங்கம் அவர்களின் தலைமையில் நன்னாரம் கிராமத்தில் தொடங்கி. இதனை தொடர்ந்து ரிஷிவந்தியம் தொகுதி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் பழங்கூர் கிராமத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை தொகுதி ஏமம் கிராமத்தில் சரவணன்,ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி மற்றும் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மாவட்ட, தொகுதி, நிர்வாகிகளால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

திருநாவலூர் பேருந்து நிலையத்தில் ஒன்றிய பொருளாளர் சத்தியமூர்த்தி அவர்களால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, செஞ்சிகுப்பம் கிராமத்தில் கன்சிராம் நகர் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி கழை கூத்தாடி சமூக மக்களால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, மாரனோடை கிராமத்தில் செக்டர் தலைவர் போனிபாஸ், செல்வம் ஆகியோர்களின் தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, பா.கிள்ளனூர் கிராமத்தில் சதிஷ் அவர்களால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கூவாகம் கிராமத்தில் ஒன்றிய மாணவரணி செயலாளர் பிரவீன்குமார் அவர்களால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருந்தை கிராமத்தில் மூர்த்தி தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது, மேட்டத்தூர் கிராமத்தில் மு. சட்டமன்றத் தொகுதி தலைவர் ஐயா.தனவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது கொடியேற்ற நிகழ்ச்சி கடைசியாக நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.மைக்கேல்தாஸ் அவர்கள் மாவட்ட, தொகுதி, மற்றும் கொடி ஏற்று விழாவில் ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார் நிகழ்ச்சி நிறைவாக உளுந்தூர்பேட்டை தொகுதி தலைவர் பொன்னுரங்கம் மற்றும் தொகுதி பொதுச்செயலாளர் ஆரோக்கியச்செல்வம் நன்றி தெரிவித்தனர்.