
உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 11/12/22 அன்று மாவட்ட செயற்குழு கூட்டம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் ந.ஜீவன்ராஜ் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட பொருளாளர் சிவபெருமான் வரவேற்பு அளித்தார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருஞ்சிறுத்தை கலியமூர்த்தி பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஆனந்தன் ஆகியோர் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து உரையாற்றி ஜெய்பீம் மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது இதனை தொடர்ந்து மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய பட்டது இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் அரிகிருஷ்ணன் தொகுதி தலைவர் ஜெ.பொன்னுரங்கம் தொகுதி பொதுச்செயலாளர் ஆரோக்கியச்செல்வம், பொருளாளர் அறிவுசெல்வம், தொகுதி மாணவரணி செயலாளர் சதிஷ், கள்ளக்குறிச்சி தொகுதி தலைவர் தண்டபாணி மற்றும் புதிய நிர்வாகிகள் மாவட்ட பொதுச்செயலாளராக செம்மணங்கூர் கண்ணன், உளுந்தூர்பேட்டை தொகுதி செயலாளராக சரவணன், திருநாவலூர் ஒன்றிய தலைவராக ஏழுமலை, திருநாவலூர் ஒன்றிய செயலாளராக அறிவொளி, தியாகதுருவம் ஒன்றிய தலைவராக தினேஷ் ஆகியோர்க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இறுதியாக உளுந்தூர்பேட்டை தொகுதி பொதுச்செயலாளர் ஆரோக்கியச்செல்வம் அவர்கள் நன்றி கூறினார்.