
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை,பொன்னாங்கன்னி ராமு (எ) கேசவனை அடித்து படுகொலை செய்யப் பட்டதை கண்டித்து. நீதி கேட்டு சுல்தான்பேட்டையில் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 26- 2 -2022 இன்று பகுஜன் சமாஜ் கட்சி ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்றது காவல்துறை அனுமதி மறுத்ததுதடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலித் விடுதலை கட்சி பொது செயலாளர் டாக்டர் . செங்கோட்டையன் அருந்ததியர் இளைஞர் பேரவை – மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மண்டல செயலாளர் சுசி. கலையரசன்,தமிழ் சிறுத்தைகள் கட்சி தலைவர் அகத்தியன்,மக்கள் விடுதலை முன்னனி தலைவர் மாரிமுத்து,பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் சென்னியப்பன்,மற்றும் பல்வேறு முற்போக்கு இயக்க மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.