பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் கோகுல்ராஜ் ஆணவ படுகொலைகொலை வழக்கில் போராடி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத்தந்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா.!

தமிழகத்தில் அதிரவைத்த பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் அவர்களை ஆதிக்கசதியினர் தலையை துண்டித்து மிகக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்ந்து ஏழு ஆண்டுகள் நடத்திவந்த அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி மோகன் மற்றும் இந்த போராட்டத்திற்கு சமரசம் இன்றி போராடிவந்த பகுஜன் சமாஜ் கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் சந்தியூர் பார்த்திபன் அவர்களை கவுரவிக்கும் விதமாக ஈரோடு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு நேற்று (05/04/22) அன்று செய்யப்பட்டிருந்தது. இதில் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தலைமை தாங்கி பாராட்டியும் நினைவு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் ஏற்பட்ட இன்னல்களை அரசு மூத்த வழக்கறிஞர் மோகன் உரையாற்றினார் இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர் உலக அறிஞர்களின் இருவர் மட்டுமே மாபெரும் சிந்தனையாளர்கள் ஒருவர் “காரல்மார்க்ஸ் மற்றொருவர் டாக்டர் அம்பேத்கர்” என்றும் புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களை அரசியல் படுத்துவதில் ஆம்ஸ்ட்ராங் ஆகச் சிறந்த தலைவர் எனவும் புகழாரம் சூட்டினார்.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் பல்வேறு நெருக்கடிகளையும் தாங்கள் சந்தித்த சோதனைகளையும் வழுக்கு விளக்க உரை மற்றும் கருத்தாக்கம் பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன் அவர்கள் எடுத்துரைத்தார் இதனை தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை வழக்கில் வழக்குப்பதிவு செய்ய கோரி ஈரோடு தலைமை மருத்துவமனையில் சட்டப் போராட்டம் நடத்திய கைதான பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்பாளர்கள் 38 பேரையும் பாராட்டும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *