
திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்ட ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட செங்கனங்கொல்லை கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட மக்களுக்காக 166 இலவச மனைப்பட்டா ஒப்படை வழங்கப்பட்டது இதனை முறையாக அளந்து அத்து காட்டாமல் அலைக்கழிப்பு செய்து வந்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி உடன் இணைந்து செங்கன கொள்ளை கிராம மக்கள் வீடு கட்டி குடியேறும் போராட்டம் 12/06/23ல் நடத்துவதாக திட்டமிட்டிருந்தனர். இந்தக் குடியேறும் போராட்டம் சம்பந்தமாக திருக்கோவிலூர் வட்டாட்சியர் தலைமையில் சனி கிழமை சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருஞ்சிறுத்தை கோ.கலியமூர்த்தி ரிஷிவந்தியம் ஒன்றிய தலைவர் சரவணன் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர் இந்த சமாதான கூட்டத்தில் முறையாக அளந்து அத்து காட்டப்படு இ-பட்ட வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியுடன் கோப்பு வழங்கி அனுமதிக்காக காத்திருப்பதாகவும் உடனடியாக பட்டா வழங்குவதாகவும் வட்டாட்சியர் தலைமையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த சமாதான கூட்டத்தில் திருக்கோவிலூர் காவல் கண்காணிப்பாளர், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் ஆதி திராவிட நலம், திருக்கோவிலூர் காவல் ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் வீடு கட்டி குடியேறும் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.