பகுஜன் சமாஜ் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் தலைமையில் மாவட்டசெயற்குழு கூட்டம் நடைபெற்றது.!


நேற்று 10-07-22 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில், வடலூரில் கடலூர் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் தணிகைச்செல்வன் தலைமையில் நடந்தது…

மாவட்ட பொதுச் செயலாளர் ச.ஜெயபிரகாஷ் வரவேற்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் இரா. விஜயகாந்த், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எஸ். எஸ். ஸ்ரீகாந்த், மாவட்ட அலுவலக செயலாளர் ப.கா. ரேவந்த் ஆண்டனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்…

செயற்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.1.எதிர்வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி, தமிழ்நாடு – பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் சென்னையில் நடைபெறும் இளைஞர் எழுச்சி மாநாட்டிற்கு கடலூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் பெருந்திரளாக பங்கேற்பது எனவும். 2.மாநாடு குறித்தும், மாநாட்டின் நோக்கம் குறித்தும் சட்ட மன்றதொகுதி வாரியாக கிராமங்கள் தோறும் சென்று பிரச்சாரத்தை மேற்கொள்வது எனவும். 3.விக்கிரவாண்டி -கும்பகோணம் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை விரைந்து முடிக்காத தேசிய நெடுஞ்சாலைத்துறையைக் கண்டித்து நெய்வேலி – இந்திரா நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்முருகன், மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே. அருட்செல்வன், பாம்செப் மாவட்ட அமைப்பாளர் அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர்…

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி சார்பாக மாவட்ட செயலாளர் தன.வேலாயுதம், தொகுதி தலைவர் த.மோகன்தாஸ், தொகுதி பொதுச்செயலாளர் சக்தி (எ) சசிகுமார், தொகுதி பொருளாளர் கருணாகரன், தொகுதி இளைஞரணி அமைப்பாளர் சி.சோமசுந்தரம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய தலைவர் வை. சங்கர், ஒன்றிய பொருளாளர் த.விக்னேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ரவிச்சந்திரன்…

நெய்வேலி சட்டமன்ற தொகுதி சார்பாக, தொகுதி தலைவர் சி.வினோத்குமார், தொகுதி பொதுச்செயலாளர் ப. ஐயப்பன், தொகுதி அலுவலக செயலாளர் சி.ஆறுமுகம், பண்ருட்டி ஒன்றிய தலைவர் பி பழனி, நெய்வேலி நகர தலைவர் இரா. ராஜேந்திரன், நகர செயலாளர் பிரசாந்த், நகர பொருளாளர் சரவணன்.

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ப. நடராஜன், பொதுச் செயலாளர் இரா. நிர்மல்குமார், பண்ருட்டி நகர தலைவர் ம.மணி, அண்ணா கிராம ஒன்றிய செயலாளர் அருண், ஒன்றிய பொருளாளர் செல்வகுமார்., கடலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக தொகுதி தலைவர் ஜெ. பிரகாஷ் மற்றும் முன்னணி நிர்வாகிகளான தனுஷ், பிரவீன், அபி, மகஷே் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *