
கெடிலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதி திருநாவலூர் ஒன்றியத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொது மக்களுக்கு தர்பூசணி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மாவட்ட தலைவர் ந.ஜீவன்ராஜ் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருஞ்சிறுத்தை கலியமூர்த்தி கலந்து கொண்டு தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார் இதில் முன்னாள் தொகுதி தலைவர் தனவேல் மாவட்ட பொது செயலாளர் கண்ணன் மாவட்ட செயலாளர் ஆனைவரி மூர்த்தியார் மாவட்ட பொருளாளர் சிவபெருமான் உளுந்தூர்பேட்டை தொகுதி தலைவர் பொன்னுரங்கம் தொகுதி பொதுச்செயலாளர் ஆரோக்கியச்செல்வம் தொகுதி மாணவரணி செயலாளர் சதிஷ் திருநாவலூர் ஒன்றிய தலைவர் ஏழுமலை ஒன்றிய செயலாளர் மைக்கேல் மரனோடை செக்டார் தலைவர் போனிபாஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து கடந்த 09ம் தேதி கூவாகம் கோவில் திருவிழா ஆய்வுக்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் அவர்கள் தனது உதவியாளரை தன் காலில் போட்டிருந்த காலனியை எடுத்து காரில் வைக்க சொன்னதை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பினர்.