
சென்னை: திமுக-வின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக பணியாற்றி வரும் அமைச்சர் செந்தில்பாலாஜி பல்வேறு ஊழல் வழக்கில் அமலாக்க துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் 13 ஜூன் 23ல் தலைமைச் செயலக அலுவலகத்தில் நடத்தப்பட்ட நீண்ட சோதனைகளுக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று ஜூன் 14 அதிகாலை அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கதறி அழுத அமைச்சர் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரின் இருக்கையில் படுத்தபடி செந்தில் பாலாஜி துடிக்கும் காட்சிகளை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்றுவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி வந்து விசாரணை நடத்தினார். பின்பு செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை குறித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
புறநோயாளிகள் பிரிவில் வந்தவர்களை, இளம் மருத்துவர்கள் பரிசோதித்து, வழக்கமான மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டு, அடுத்த வாரம் வந்து பரிசோதித்து கொள்ளலாம் எனக்கூறி அனுப்பி வைத்தனர். பார்வையாளர்கள் அனுப்பி வைக்கப்படாததால், நோயாளிகளுக்கு மருத்துவமனை வளாகத்திலேயே உணவு அளிக்கப்பட்டது. அவசர உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் மட்டுமே, நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதனால் நோயாளிகளை கவனிப்பதற்கு கூட உறவினர்கள் அனுமதிக்காததால் நோயாள மிகவும் அவதிப்படு வந்தனர்.