
நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட்டு நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று 03/08/22 நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகத்தைப் பூட்டி அமலாக்கத் துறையினர் சீல் வைத்தனர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள, ‘யங் இந்தியா’ நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதில் மோசடி நடந்து உள்ளதாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை கடந்தாண்டு இறுதியில் வழக்குப் பதிவு செய்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம், ஏற்கனவே விசாரணை நடந்தது சீல் வைக்கப்பட்டதால்

இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.