
செங்கல்பட்டு:
கண்கானிப்பு விழிப்புணர்வு வாரம் 2022 முன்னிட்டு அனைவரிடத்திலும் விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் நேரு யுவ கேந்திரா- காஞ்சிபுரம் மற்றும் விழித்தெழு தோழா-தமிழ்நாடு இணைந்து நடத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள
குரு ஸ்ரீ சாந்தி விஜய் ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அக்.26 முதல் நவம்பர் 02 நடைபெற்றது. ‘நேர்மையே வாழ்க்கையின் வழி’ என்பதை நோக்கமாக கொண்டு.2022 அக் 26 முதல் நவ-02 வரை நாடெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இந்த நிகழ்ச்சி எற்பாடு செய்யபட்டது. “நேர்மையுடன் கூடிய மாணவ சமுதாயத்தை உருவாக்குவோம் மனித நேயம்காப்போம்”எனும் கருப்பொருளில் ஊழல் எதிர்ப்பு குறித்து சமூக விழிப்புணர்வை பரப்பும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டன. இதில் கல்லூரி முதல்வர். உயர்திரு. சுப்புரமணியன் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினர்.சென்னை உயர்நீதி மன்ற குடும்ப நல ஆலோசகர், மனமே தொண்டு நிறுவன இயக்குனர் மற்றும் சங்க ஆலோசகருமான திருமதி. மணிமேகலை அவர்கள் நமது இந்தியாவில் ஊழல் ஊடுருவி இருப்பதை மிகத்தெளிவாகவும், எளிமையாகவும், மாணவர்கள் புரிந்துகொண்டு விழிப்புணர்வு அடையும் வகையில் விளக்கி கூறினார்.வழக்கறிஞர், சங்க ஆலோசகர், செல்வி. பிரியங்கா “லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் அவற்றை கொடுக்க துண்டுவதும் பெருங்குற்றம் லஞ்சம், ஊழல் குறித்த சட்டபூர்வமான சட்ட விதிகள் மற்றும் உட்பிரிவுகளை எடுத்து கூறினார். லஞ்சம், ஊழல் குறித்த செயல்பாடுகளை கண்டால் அவற்றை எவ்வாறு சட்டபூர்வாமக கையாள வேண்டும் என்பதையும் கூறினார்.உளவியாலர், சங்க நிறுவனர். திரு. கேசவன் அவர்கள் டாக்டர். A.P.J. அப்துல் கலாம் ஐயா அவர்களின் பொன்மொழிகள் நினைவு கூறி அவர்கண்ட கனவை இந்திய வல்லரசு அடையும் என்பதை நினைவாக்க ஊழல் மிக பெரிய தடையாக உள்ளதை விளக்கி கூறி மாணவர்கள் மத்தியில் உறுதி மொழி எடுக்கப்பட்டது, உளவியாலர் திருமதி. சாந்தகுமாரி அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.பேராரசரியர், சங்க அமைப்பாளர் திரு.சேகர் அவர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கினார். இறுதியாக கல்லூரி துணை முதல்வர். இச்சேவையை பாரட்டி மேலும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றும் அனைவருக்கும் நன்றி கூறி இந்நிகழ்ச்சி நிறைவுசெய்தார். இந்நிகழ்ச்சியில் சுமர் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.