
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கடந்த ஏப்ரல் 25ம் தேதியன்று தனது கடமையை நேர்மையான முறையில் செய்து முடித்த காரணத்திற்காக சமூக விரோதிகள் மற்றும் மணல் மாஃபியாக்களால் படுகொலை செய்யப்பட்ட முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் அவர்களை படுகொலை செய்தசமூக விரோதிகள் மற்றும் மாஃபியாக்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் பகுஜன் சமாஜ் கட்சியினர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை.
முறப்பநாடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியை செய்து வந்த. திரு.லூர்து பிரான்சிஸ் அவர்களை அரசு அவருக்கு வழங்கிய கடமையை நேர்மையான முறையில் செய்ததற்காக சமூக விரோதிகள் மற்றும் மணல் கடத்தல் மாஃபியாக்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி செயலானது இந்த சமூகத்தையும் இந்த அரசு இயந்திரத்தையும் அச்சுறுத்தும் மற்றும் இயங்குவதை தடை செய்யும் விதமாக அமைந்துள்ளது. இதனால் அரசின் கடமையை தவறாமல் செய்தால், நேர்மையான முறையில் பணி செய்தால் சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யபடுவோம் என்ற அச்சத்தினை அனைத்து அரசு பணியாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இனிமேல் நேர்மையான முறையில் பணியாற்றினால் அரசு ஊழியர்களாகிய நாமும் வெட்டி படுகொலை செய்யப்படுவோம் என்று அச்சப்படக்கூடிய ஒரு அவல் நிலையை ஏற்படுத்தி விட்டார்கள். மேலும் அரசின் கடமையை தான் செய்கிறோம் என்று சொல்லி எந்த அரசு ஊழியராவது பணி செய்தால் அவர்களும் இப்படித்தான் வெட்டி படுகொலை செய்வோம் என்று சமூக விரோதிகள் எச்சரிக்கும் விதமாக அமைந்துள்ளது.
எத்தனையோ சமூக அவளத்திற்காக போராடிய மக்கள் மீது பாய்ந்த காவல்துறையின் துப்பாக்கி குண்டுகள் இவர்களை ஒன்றும் செய்யவில்லையே? எத்தனையோ நீதி கேட்டு போராடிய சமூக ஆர்வலர்கள் மீது பாத்ரூமில் வழுக்கி விழும் ஒரு வைத்தியம் நடைபெற்றது அது போன்று இந்த மனல் கடத்தல் மாஃபியாக்களுக்கு நடைபெறவில்லையே? எத்தனையோ நியாய- தர்மத்திற்காக போராடிய சமூக ஆர்வலர்கள் மீது தடுப்பு காவல் சட்டங்கள் பாய்ந்தது போன்று இந்த மணல் மாஃபியாக்கள் மீது இன்னும் தடுப்பு காவல் சட்டம் பாயவில்லையே? அரசு நடத்துகின்ற டாஸ்மாக் கடையின் மூலம் விற்பனை செய்யப்படுகின்ற மதுபானங்களை வாங்கி அருந்திவிட்டு போதை தலைக்கேறி என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் காவல்துறையின் மீதும் அல்லது அரசு அதிகாரிகளின் மீதும் எதிர்பாராத விதமாக தாக்குதல் நடத்துகின்ற நபர்களை காவல்துறையை விரைந்து நடவடிக்கை(கை கால் உடைப்பு சம்பவங்கள் எடுத்தது போன்று மேற்படி விஏஓ படுகொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? எனவே இது போன்ற சமூகவிரோதிகளின் மீது நியாய தர்ம சட்டத்தின்படி தண்டனை பெற்றுத்தர காத்திருக்காமல் மேற்கண்ட ஏதாவது ஒரு தண்டனையை அரசு உடனடியாக அவரர்களுக்கு வழங்க வேண்டும் அல்லது.
இதுபோன்று நேர்மையாக பணியாற்றுகின்ற அதிகாரிகளுக்கு, அலுவலர்களுக்கு உடனடியாக அரசு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் மேலும் லூர்து பிரான்சிஸ் படுகொலை சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசு விரைவாக உயர்ந்த பட்ச தண்டனை வழங்கும்படியும் மேலும் இதுபோன்று நேர்மையாக பணியாற்றுகின்ற அதிகாரிகளை தாக்க முற்படுகின்ற சமூக விரோதிகளுக்கு லூர்து பிரான்சிஸ் அவர்களை படுகொலை செய்த மணல் கடத்தல் மாஃபியா கும்பல்களுக்கு வழங்குகின்ற தண்டனையானது முன் உதாரணமாக அமைய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாக மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கின்றோம்.