
திருப்போரூர்: செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று 02 ஜனவரி 2023 “நேரு யுவ கேந்திர – இளைஞர் நலன் – விளையாட்டுத்துறை” மற்றும் “விழித்தெழு தோழா” அமைப்புடன் இணைந்து ‘விழித்து எழு விண்ணை தொடு” மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி மற்றும் தொழிற் கண்காட்சி முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விழித்தெழு தோழா அமைப்பின் நிறுவனர் திரு.C.கேசவன் அனைவரையும் வரவேற்றார், சிறப்பு விருந்தினராக திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.S.பாலாஜி, B.E., L.L.B., திருமதி.லில்லி காவல் ஆய்வாளர், E-6 காவல் நிலையம், திருப்போரூர், அனிச்சா டிஜிட்டல் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனர் திரு.K.R.கீர்த்திராமன், 14417 கல்வி தகவல் மையத்தின் செயல் தலைவர் திரு.பால் ராபின்சன், தமிழக அரசு வேலைவாய்ப்பு அலுவலர் திரு.தனசேகர், ஆசான் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் திரு.M.குமரேசன், ஜெயின் கலை கல்லூரியின் முதல்வர் முனைவர் திரு.சுப்பிரமணியன், மனநல ஆலோசகர் செல்வி.மும்தாஜ் பேகம், திருமதி.மணிமேகலை, மனநல ஆலோசகர் – குடும்ப நல நீதிமன்றம்,சென்னை, திருமதி.P.பிரமிளா, வழக்கறிஞர், காவல்துறை நலன் பயிற்சியாளர், சென்னை ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நேரு யுவ கேந்திர காஞ்சிபுரம் அலுவலர் திரு.A.சரவணன் மற்றும் கல்லூரி பேராசிரியர் திரு.சேகர் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினர். இறுதியாக வேலூர் மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை திரு.மகேஷ்வரன் வெங்கடேசன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.வேலூர் மாவட்ட இணைச்செயலாளர் திரு.M.மணிகண்டன் இவ்விழாவை ஒருங்கிணைந்தார். இந்த விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் பலர் கலந்து கொண்டனர்.