
சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் செந்தில்குமார், தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.தற்கொலைக்கு காரணம் குடும்பப் பிரச்னையா, பணிச் சுமையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

உயிரிழந்த காவலரின் உடலை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்து உள்ளனர். ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சில ஆண்டுகளாகவே காவலர்கள் பணிச்சுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டு வருவது பெரும் சோகத்தினை ஏற்படுத்துகிறது மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுமே தவிர இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்பது பொது மக்களின் எண்ணமாக உள்ளது.