
வடலூர்: நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளரின் மகளான மாணவி நிஷா, மருத்துவ படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதவிருந்தார். இதற்காக தனியார் பயிற்சி மையத்தில் தீவிரமாக பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று மாலை வடலூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தலையை வைத்து மாணவி நிஷா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரயில்வே காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் பயிற்சி மையத்தில், நடத்தப்பட்ட மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் நிஷா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.