
புதுடில்லி: தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவருவதை அடுத்து அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு உதவுவதற்காக மருந்து பொருட்கள் , குழந்தைகளுக்குதேவையான பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் வகையில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தன. இதனையடுத்து நிவாரண பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க வெளியுறவுத்துறைக்கு உத்தரவிடும் படி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கடித்ததில் கூறி இருப்பதாவது:தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படும்.தமிழக அரசு அனுப்பி வைக்க உத்தேசித்து உள்ள நிவாரண பொருட்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். என குறிப்பிட்டு இருந்தார். முன்னதாக தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை தமிழக அரசு அனுப்ப உத்தேசித்து உள்ள நிவாரண பொருட்களை மத்திய அரசின் வெளியுறவுத்துறையிடம் வழங்கும் படி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.