நிலத் தகராறில் அண்ணனை கட்டையால் அடித்து சாகடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம்: மணலூர்பேட்டை அருகே தேக்குமரம் யாருக்கு சொந்தம் என சகோதர்கள் இடையே எழுந்த தகராறில், மூத்த சகோதரரை தம்பியே மனைவியின் உறவினர்களுடன் சேர்ந்து கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.திருக்கோவிலூர் அடுத்த செம்படை கிராமத்தை சேர்ந்த விவசாய வேலை செய்யும் சக்கரவர்த்தி மற்றும் சந்திரசேகர் ஆகிய சகோதர்கள் இடையே அடிக்கடி நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளைய சகோதரர் சந்திரசேகரன் தனது விவசாய நிலத்தில் இருந்த 6 தேக்கு மரங்களில் 4 மரங்களை வெட்டி பயன்படுத்தியதாகவும், இதனால் மீதம் இருந்த 2 மரங்கள் தனக்கு சொந்தம் என நினைத்த மூத்த சகோதரர் சக்கரவர்த்தி அதனை சீர் செய்யும் வேலையை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.இதில் ஆத்திரம் அடைந்த சந்திரசேகரன் அவரது சம்மந்தி ஆட்டுக்காரன் உள்ளிட்ட உறவினர்களை அழைத்துச் சென்று சக்கரவர்த்தியின் வீட்டின் கதவை உடைத்து அவரை வெளியே இலுத்து வந்து கட்டைகளால் அடித்துள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக மணலூர்பேட்டை காவல்துறையினர் 3 பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள சந்திரசேகரன் மற்றும் ஆட்டுகாரன் ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *