
வெலிங்டன்: நியூசிலாந்தில் கேப்ரியல் என்கிற புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நியூசிலாந்து அரசு தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது.சில தினங்களாக முன், நியூசிலாந்தில் கேப்ரியல் என்கிற சக்திவாய்ந்த புயல் உருவாகியது. இதனால் நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஆக்லாந்து நகரில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்தது. இதனால் நியூசிலாந்தில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. இதில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து தரமட்டமாகின. மேலும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டது. சூறவாளி காற்று வீசியதில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகள் வெள்ளம் நிறைந்து காணப்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மோசமான வானிலை சீரமைப்பு பணிகளை பாதுகாப்பற்றதாக மாற்றியுள்ளதால், மின் இணைப்பை மீண்டும் கொண்டுவர பல நாட்கள் ஆகலாம் என மின்சார துறை அதிகாரிகள் கூறுகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதியில், மீட்பு படையினர் தீவிராக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நியூசிலாந்து அரசு தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது. கனமழை காரணமாக பல்லாயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அவசரகால மேலாண்மை அமைச்சர் கீரன் மெக்அனுல்டி பிரகடனத்தில் கையெழுத்திட்டார். மேலும் அவர் கூறுகையில், வடக்கு தீவின் பெரும்பகுதி முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.கேப்ரியல் சூறாவளி ஆக்லாந்தின் வடகிழக்கில் 100 கிமீ தொலைவில் உள்ள பகுதியில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல சிறிய கடற்கரை நகரங்களில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர். மலையின் அடிவாரத்தில் உள்ள வீடுகள் நிலச்சரிவால் இடிந்து தரைமட்டமாகின எனக் கூறினார். தீயணைப்பு துறையின் தலைமை நிர்வாகி கூறுகையில், மேற்கு ஆக்லாந்தில் வீடு இடிந்து விழுந்ததில் தீயணைப்பு வீரர் ஒருவரை காணவில்லை , மற்றொருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். நாங்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறோம் எனக் கூறினார்.