நியவிகடைகளில் பயோமெட்ரிக் முறை சிக்கலுக்கு, மாற்று முறைகளை, கூட்டுறவுத்துறை அமைச்சர் இன்று அறிவித்துள்ளார்..!!

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன..மற்றொரு புறம், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.. இதனிடையே, கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் பொது விநியோகத்திட்ட நியாயவிலை கடைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அவ்வப்போது பணியிடங்களுக்கான அறிவிப்பும் வெளியாகி கொண்டிருக்கிறது.. அந்த வகையில் சமீபத்தில் புது அறிவிப்பு வெளியானது.

அதில், எடையாளர்கள், பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டது..மாவட்டவாரியாக மொத்தம் 3,300 விற்பனையாளர்கள், 600 எடையாளர்கள் என மொத்தம் 4,000 பேர் விரைவில் நிரப்பப்பட உள்ளனர் என்றும், இந்த பணி நியமனங்களுக்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் கூட்டுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில், நியாய விலைக் கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி புது அறிவிப்பு ஒன்றை இன்றைய தினம் வெளியிட்டுள்ளார்.பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று, நியாய விலைக் கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து, சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதற்கு விளக்கம் அளித்து உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி பேசியபோது, “இந்திய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பயனாளிகளின் ஆதார் நம்பர், விரல்ரேகை சரிபார்ப்புக்கு பிறகு, பொருட்கள் வழங்கப்படுகின்றது.விரல் ரேகை சரிபார்ப்பு வயோதிகம் போன்ற காரணங்களால் தோல்வியுறும்போது கையெழுத்து பெற்று பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.. அதேபோல, மாற்றுத்திறனாளிகள் கடைக்கு வராத நிலையில், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் வாயிலாக பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 98.23 சதவீத விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

விரல் ரேகை சரிபார்ப்பில் சிக்கல் இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர்கள் சொல்லி வருவதால், கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக நகரப் பகுதிகளில், ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும்” என்று விளக்கம் தந்தார் சக்கரபாணி. இதையடுத்து, சிறுதானியங்களை அரசு கொள்முதல் செய்யுமா? என்று விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, “உணவுத் துறை இதுவரை நெல் கொள்முதலில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. விளாத்திகுளம், தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் பகுதிகளில் உளுந்து, சிறுதானியங்கள் அதிக அளவில் விளைகிறது… இனி வரும் காலங்களில் உளுந்து, சிறுதானியங்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும்.. அதேபோல, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நவீன அரிசி ஆலைகள் அமைக்கப்படும்” என்றும் உறுதி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *