”நான் பி-டீமும் இல்லை, பாஜக கூட கூட்டும் இல்லை” – பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி..!

லக்னோ: நான் யாருடைய பி-டீமும் இல்லை, பாஜகவுடன் எந்த தொடர்பும் இல்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தேசிய தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாயாவதி குறித்தும் பகுஜன் சமாஜ் கட்சி குறித்தும் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு மாயாவதி தற்போது பதிலளித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது…அமித்ஷாஉத்தரப்பிரதேசத்தில் 5ம் கட்ட தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய அமைச்சர் அமித்ஷாவும் பாஜகவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ” உத்தரப்பிரதேச அரசியலில் மாயாவதியின் முக்கியத்துவம் இன்றும் குறைந்துவிடவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி மக்களிடையே தனது செல்வாக்கை இழந்துவிட்டதாக கூறுவது தவறு. அவர்கள் ஓட்டுகளை பெறுவார்கள் என நம்புகிறேன். அது எப்படி வெற்றியாக மாறும் என்பது எனக்கு தெரியவில்லை” என அமித்ஷா தெரிவித்திருந்தார்.

மாயாவதி இந்நிலையில், பகுஜன் சமாஜ் குறித்து அமித்ஷா கூறிய கருத்துக்கு மாயாவதி பதிலளித்துள்ளார். அதில், ”உண்மையை உணர்ந்து கொண்டது அமித்ஷாவின் பெருந்தன்மையை காட்டுகிறது. அதேநேரத்தில் அவருக்கு ஒன்று தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். நடந்து முடிந்த 3 கட்ட தேர்தலில், தலித்கள் மற்றும் முஸ்லிம்களின் ஓட்டுகளை மட்டும் பகுஜன் சமாஜ் பெறவில்லை. உயர்சாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் எங்களுக்கு ஓட்டு போட்டுள்ளனர்.பகுஜன் சமாஜ்உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக கைப்பற்றும் என்று பிரசாரம் செய்கிறார்கள். இதற்கு காலம்தான் பதில் சொல்லும். சமாஜ்வாதி, பாஜக-வுக்கு பதிலாக பகுஜன் சமாஜ் கட்சியும் உத்தரப்பிரதேசத்தில் வெற்றியைப் பதிவு செய்யலாம். சமாஜ்வாதியை மக்கள் நிராகரித்து விட்டனர். அக்கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் குண்டர் ஆட்சிக்கு வழிவகுக்கும் என்பது அவர்களுக்கு தெரியும்.பி டீம்பகுஜன் சமாஜ் கட்சிக்கு இன்னும் ஆதரவு இருப்பதாக அமித்ஷா பேசியது, உத்தரப்பிரதேச வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாயாவதியை அமித்ஷா ஆதரித்துப் பேச காரணம் என்ன என பேச்சு அடிபட்டது. இந்நிலையில்,, இந்த கருத்துக்கு மாயாவதி பதிலளித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் நடந்த பிரசாரத்தில், ”நான் யாருடைய பி டீமும் இல்லை. தேர்தலுக்கு முன்போ, அல்லது பின்போ நான் பாஜக-வுடன் கூட்டணி வைக்க மாட்டேன். மக்களுக்கு எதிராக செயல்படும் யாருடனும் எப்போதும் கூட்டணி கிடையாது” என்று தெரிவித்துள்ளார் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *