“நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது, பாஜக” – மெகபூபா முப்தி குற்றச்சாட்டு..!

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்குச் செல்வதற்கு எதிர்ப்பு கிளம்பிய விவகாரம், இந்திய அளவில் பெரும் சர்ச்சையானது. ஹிஜாப் விவகாரம் கர்நாடக உயர் நீதிமன்றம் தொடங்கி இப்போது உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், `ஹிஜாப் விவகாரத்தைத் தேசியப் பிரச்னையாக மாற்ற வேண்டாம்’ எனக் கூறி, இதை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறும் என்றும் கூறியிருக்கிறது.இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்குப் போராடப் போவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் அவர், ``நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி நடக்கிறது. பா.ஜ.க வெறும் ஹிஜாபோடு நிற்காது என்று நான் அஞ்சுகிறேன். அவர்கள் முஸ்லிம்களின் மற்ற அடையாளங்களைத் தேடி வந்து அனைத்தையும் அழித்துவிடுவார்கள்.இந்திய முஸ்லிம்கள் இந்தியராக இருந்தால் மட்டும் பா.ஜ.க-வுக்கு போதாது, அவர்களும் பா.ஜ.க ஆதரவாளராகவும் இருக்க வேண்டும் என நினைக்கிறது. இதை எதிர்த்து கடுமையாகப் போராட வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.bagujankural.com என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

செய்தியாளர் சிவபெருமான் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *