
புதுதில்லி: நாட்டிலேயே அதிக தொலைவு கொண்ட டெல்லி-மும்பை விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திரே மோடி இன்று 12/02/23 திறந்து வைத்தார். இந்து விரைவுச்சாலை, பயண நேரத்தை பாதியாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.1,386 கி.மீ தொலைவு கொண்ட நாட்டின் மிக நீளமான விரைவுச் சாலை டெல்லி மற்றும் மும்பையை இணைக்கும். டெல்லி-மும்பை விரைவுச்சாலை திட்டத்தின்கீழ் 1,386 கி.மீ நீளமுள்ள விரைவுச்சாலை நாட்டின் மிக நீளமான விரைவுச் சாலையாக இருக்கும். இதற்கான மொத்த செலவு தோராயமாக ரூ.1 லட்சம் கோடி.மேலும், விரைவுச்சாலை திட்டம் முழுமையாக முடிந்தவுடன் டெல்லி-மும்பை பயணம் நேரம் 24 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.