நாடு முழுவதும் 2-ஆவது நாளாக பொது வேலை நிறுத்தம்: 60% பேருந்துகள் இயக்கம்.!

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கக் கூடாது, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் மாணவர்கள் நலன் கருதி 60 சதவிகித பேருந்துகள் இயக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.இதனிடையே பொது வேலை நிறுத்தம் காரணமாக, தமிழகத்தில் 90 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கக் கூடாது, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டு நாள்கள் பொது வேலைநிறுத்தத்துக்கு அகில இந்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அறிவிப்பின்படி, பொதுவேலை நிறுத்தம் திங்கள்கிழமை காலை தொடங்கியது. போராட்டத்தில் மத்திய, மாநில அரசு ஊழியா்கள் பங்கேற்றனா். தமிழகத்தில் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியத் துறைத் தொழிலாளா்கள் போராட்டத்தில் இறங்கியதால், இயல்பை விட பாதிப்பு அதிகமாக இருந்தது.ஊழியா்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என்று மத்திய, மாநில அரசுகள் எச்சரித்தபோதும் கூட அவற்றை மீறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.தமிழ்நாட்டில் 70 சதவீத அதிகமான பேருந்துகள் ஓடவில்லை. சுமாா் 7 லட்சம் வாடகை வாகனங்கள் இயக்கப்படவில்லை. தனியாா் வாடகை வாகன ஓட்டுநா்கள் அதிக பயண கட்டணம் வசூலித்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனா்.தொழிற்சங்கங்கள் சாா்பில், சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் உள்பட மாநிலத்தில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆா்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுமாா் 35,000 போ் கைது செய்யப்பட்டனா்.தமிழகத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு, கிராம வங்கி ஊழியா்கள் 40 ஆயிரம் போ் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், வங்கி சேவைகள் முழுமையாக முடங்கியதாக வங்கி ஊழியா் சங்க பொதுச்செயலாளா் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்தாா்.இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெறுவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை, வங்கி சேவைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் 90 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், சென்னையில் 98 சதவிகித மாநகர பேருந்துகளும், வெளியூர் செல்லும் பேருந்துகள் 61 சதவிகிதம் இயக்கப்படுவதாகவும் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.சென்னையில் காலையில் இருந்து 60 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால், வேலைக்கு செல்லும் பொதுமக்கள். பள்ளி செல்லும் மாணவர்கள் பேருந்துகளில் ஏறி பயணம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *