நல்லகண்ணு தமிழ்நாட்டின் பொக்கிஷம்; என அண்ணாமலை புகழாரம்..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மருமகன் கடந்த சிலநாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து நல்லகண்ணுவுக்கு ஆறுதல் கூற பாஜகமாநில தலைவர் அண்ணாமலை சென்னை நந்தனத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றார். அங்கு நல்லகண்ணுவை நேரில் சந்தித்த அண்ணாமலை அவரது உடல் நலன் குறித்து கேட்டறிந்ததோடு மருமகனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, குடும்பத்தில் ஒருவரை இழந்து வாடும் நல்லகண்ணுவின் துக்கத்தில் பாரதிய ஜனதா பங்கெடுத்துக் கொண்டது. அரசியலில் வாழும் உதாரணமாக நல்லகண்ணு உள்ளாதாகவும், நல்லகண்ணு தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் என கூறினார். மேலும் நல்லகண்ணு 100 ஆண்டுகாலம் வாழ கடவுளை பிரார்த்தனை செய்வதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *