
டெல்லி: நதிநீர் இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 5 தென்மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் ஆலோசனை தொடங்கியது. தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் சந்தீப் சக்சேனா பங்கேற்றுள்ளார். கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, பெண்ணாறு, ஆகிய ஆறுகளை இணைப்பது தொடர்பாக ஒன்றிய அரசு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.