
கோதாவரி, கிருஷ்ணா, காவேரி,பெண்ணாறு ஆகிய ஆறுகளை இணைப்பது தொடர்பாக நாளை(பிப்.18) மத்திய அரசு 5 மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது.நீர் பற்றாக்குறையை குறைக்கும் முயற்சியாக பல ஆண்டுகால திட்டமாக இருந்துவந்த நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்து நாளை மத்திய அரசு முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளது.தென்னிந்திய மாநிலங்களின் முக்கிய ஆறுகளான கோதாவரி, கிருஷ்ணா, காவேரி,பெண்ணாறு ஆகிய ஆறுகளை இணைப்பதற்காக தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம்,கேரளம்,தமிழகமாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளுடன் மத்திய அரசு இந்த ஆலோசனையில் ஈடுபட இருக்கிறது.நாளை தில்லியில் நடைபெறும்நீர்வளத் துறை அமைச்சகத்தின் கூட்டத்தில்தமிழகம் சார்பில்சந்தீப் சக்சேனாகலந்துகொள்ள இருக்கிறார்.