
ஸ்காட்லாந்து: அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் ரக விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது திடீரென எஞ்சினில் தீப்பற்றி எரிய தொடங்கியது. விமானம் ஸ்காட்லாந்து விமான நிலையத்திலிருந்து புறப்படும் போது இன்ஜினில் சத்தம் ஏற்பட்டதாகவும், இருப்பினும் வழக்கமாக விமானங்கள் புறப்படும்போது ஏற்படக்கூடிய சத்தம் என எண்ணிய விமானி தொடர்ந்து விமானத்தை இயக்கியபோது நடுவானில் விமானத்தின் எஞ்சின் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக விமானம் அவசர அவசரமாக மீண்டும் பிரேஸ்டவிக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்க பட்டது. நடுவானில் விமானத்தின் எஞ்சின் தீப்பற்றிய காட்சிகளை பயணிகள் வீடியோவாக பதிவுசெய்து வெளியிட்ட நிலையில் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.