
தெலுங்கானா: பகுஜன் சமாஜ் கட்சியின் தெலுங்கானா மாநில தலைவராக செயல்பட்டு வரும் விருப்ப ஒய்வு பெற்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி டாக்டர்.ஆர்.எஸ்.பிரவீன்குமார் அவர்கள் பகுஜன் யாத்திரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் இந்த நிலையில் 205வது நாள் யாத்திரை இன்று 30/03/23 ஆலம்பூர் தொகுதியில் தொடர்ந்தது. அப்போது அவர் கூறியது:- தொழிலாளர்கள், பணியாளர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை பிரதமர் மோடியும், அதானியும் கொள்ளையடித்து விட்டதாக டாக்டர் ஆர்.எஸ்.பிரவீன் குமார் குற்றம்சாட்டினார்.ஏமாற்றப்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் இந்துக்கள், இந்துக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற மோடி இந்துக்களின் பணத்தை கொள்ளையடிக்கிறார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஜாதிவாரி கணக்கெடுப்பு செய்யாமல், மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை அதிகரிக்காமல், மாநிலத்திலும், நாட்டிலும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள் எப்படி கேட்கப்படுகின்றன என்று கேள்வி எழுப்பினார்.