தொடர் போராட்டத்தால் கழை கூத்தாடி சமூக மக்கள் 16 குடும்பங்களுக்கு மனை பட்டா பெற்று தந்த பகுஜன் சமாஜ் கட்சி; பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!

கள்ளக்குறிச்சி: பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த வெள்ளையூர் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மனை பட்டா இல்லாமல் வாழ்ந்து வந்த கழை கூத்தாடி சமூக மக்களுக்கு சுமார் 16 குடும்பங்களுக்கு இலவச மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூடாரங்களில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் மற்றும் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் மணிமேகலை ஆகியோர்களின் தலைமையில் இன்று 21.11.2022 வழங்க பட்டது.

இதனை பெற்று கொண்ட கழை கூத்தாடி சமூக மக்கள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருஞ்சிறுத்தை கலியமூர்த்தி பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஆனந்தன் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ் மாவட்ட செயலாளர் ஆனைவரி மூர்த்தியார் மாவட்ட பொருளாளர் சிவபெருமான் மாவட்ட மாணவரணி செயலாளர் அரிகிருஷ்ணன் தொகுதி தலைவர் பொன்னுரங்கம் தொகுதி பொதுச்செயலாளர் ஆரோக்கியச்செல்வம் பொருளாளர் அறிவுசெல்வம் கள்ளக்குறிச்சி தொகுதி து.தலைவர் ராஜா மற்றும் உளுந்தூர்பேட்டை செயளாலர் சதிஷ் ஆகியோரிடம் நன்றியை பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு தெரிவித்துள்ளனர்‌.

இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கிய பொன்னாடை போர்த்தியும் நன்றி தெரிவித்து மனை பட்டா வழங்கியதை தொடர்ந்து உடனடியாக அடிப்படை தேவைகள் செய்து கொடுக்க கோரிக்கை மனு அளித்தனர் இதனைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள பாபா சாகப் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு 16 குடும்பத்தைச் சேர்ந்த 50 மேற்பட்டவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *