
சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சை மற்றும் அலட்சியம் கட்டுவது காரணமாக பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழந்தது. மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாக அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.