
தேனி: தேனி மாவட்ட விழி கண் குழு (CVMC – TN) கூட்டம் நேற்று 18 ஜனவரி 2023 தேனியில் உள்ள மாருதி ஹோட்டலில் நடைபெற்றது.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை,வீடு, நிலம், நிவாரணம் போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். பட்டியலினத்தவர் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும், சிறப்பு உட்கூறு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயல்பாடுகள் வருத்தமளிப்பதாக உள்ளது என உறுப்பினர்கள் புகார் தெறிவித்தனர். மாவட்ட பொறுப்பாளர் ப.முருகேசன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் திட்ட இயக்குனர் எட்வின், மூத்த ஒருங்கிணைப்பாளர் சித்ரா,ஆ.இராமசாமி, ஜெயச்சந்திரன், முத்து முருகேசன், குருசாமி, கண்ணன், அருந்தமிழரசு, மனோகரிதாஸ், அலமேலு, மாரியம்மாள், அன்புச்செல்வி உட்பட பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.