
உளுந்தூர்பேட்டை: கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ம.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த Dr.சங்கர், அவர்கள் MYV3 ADS செயல் திட்டத்தின் இயக்குனாராக உள்ளார். அவர் தேசிய புத்துணர்வு மற்றும் சமூக மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு செயல் புரிந்ததை பாராட்டி அவருக்கு மத்திய அரசு அமைப்பான பாரத் சேவக் சமாஜ் மூலம் பாரத் சேவக் எனும் சிறப்பு அங்கீகாரம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த அங்கீகாரம் சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதியும், இந்திய தேசிய பசுமை தீர்பாயத்தின் திடக்கழிவு மேலாண்மை குழு சேர்மன் மாண்புமிகு நீதியரசர் Dr.ஜோதிமணி அவர்களின் திருக்கரங்களால் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் 1952ம் ஆண்டு துவக்கப்பட்டு, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‘பாரத் சேவக் சமாஜ்’ அமைப்பின் மூலமாக, பல்வேறு துறைகளில் சேவை புரிந்தமைக்காகவும், சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு பணி செய்ததை பாராட்டியும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.