
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் அய்யனடைப்பு சோரீஸ் புரத்தை சேர்ந்த முத்துக்குமார் தூத்துக்குடி நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்த வந்த நிலையில் சமூக விரோதி கும்பலால் படு கொலை செய்ய பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்க தக்கது. மேலும் முத்துக்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் மமக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
கடந்ந ஆண்டுக்கு முன்னாள் பழிக்கு பழி வாங்கும் செயலாக தொடர்ந்து படு கொலை சம்பவங்கள் நிகழ்ந்ததால் பொது மக்கள் அச்சத்தோடு வாழ்கிற சூழ்நிலை ஏற்ப்பட்டன. ஆனால் இப்போது பழிக்கு பழி என்கிற படு கொலை சம்பவங்கள் குறைந்ததால் பொது மக்கள் நிம்மதியாக வாழும் சூழலில் மீண்டும் தலை விரித்தாடும் வகையில் பழிக்கு பழியாக வழக்குறிஞர் முத்துக்குமார் படு கொலை சம்பவம் பொது மக்களிடை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் பழிக்கு பழி என்று படு கொலை செய்வது எந்த விதத்திலும் தீர்வு காண முடியாது என்பதை உணர்ந்து பழிக்கு பழி வாங்கும் மன நிலலையை மாற்றி மனிதனாக வாழ வேண்டும் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்
எனவே – வழக்குறிஞர் முத்துக்குமாரை கொடூரமான முறையில் படு கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க பட வேண்டும். மேலும் தென் மாவட்டங்களில் மறை முகமாக நடை பெறும் கட்ட பஞ்சாயத்து ரவுடிசைத்தை ஒழிக்க தனிப்படை அமைத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.