
துருக்கியின் தெற்கு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான நிலையில், ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இதன் தாக்கம் அண்டை நாடுகளான சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. மொத்த உயிரிழப்பு கணக்கிடப்படாத நிலையில் எண்ணிக்கை இன்னும் உயரும் என அஞ்சப்படுகிறது.