
43 கிராமங்கள் தீண்டாமையை கடைபிடித்து தமிழக அளவில் மதுரை மாவட்டத்தை முதல் இடத்தில் நிறுத்திய அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த ஆதாரப்பூர்வமான விவரங்களை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றிருக்கும் மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக் என்பவர் .கடந்த 2021-ம் ஆண்டின் இறுதி நிலவரப்படி தமிழக காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஏ.டி.ஜி.பி-யின் அறிக்கையின்படி தமிழகத்தில் தீண்டாமை பாகுபாடு கடைபிடிக்கப்படுவதாக 445 கிராமங்கள் அடையாளப்படுத்துப்பட்டுள்ளன.இதில் அதிகபட்சமாக 43 தீண்டாமை கடைபிடிக்கும் கிராமங்களுடன் மதுரை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. 25 கிராமங்களுடன் விழுப்புரம் இரண்டாம் இடத்திலும், 24 கிராமங்களுடன் திருநெல்வேலி மூன்றாம் இடத்திலும்,19 கிராமங்களுடன் வேலூர் நான்காவது இடத்திலும், 18 கிராமங்களுடன் திருவண்ணாமலைஐந்தாவது இடத்திலும் உள்ளது. அதன் கீழ் பல மாவட்டங்கள் வரிசையாக இருந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதில் ஒரே ஒரு தீண்டாமை கிராமத்துடன் சென்னையும் கடைசியில் இடம் பிடித்துள்ளது.